விளையாட்டாக கேபிள் காரிலிருந்து குதித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் சேர் வடிவிலான கேபிள் கார் ஒன்றில் பயணித்த இளம்பெண்கள் இருவர் மற்றவர்களுக்கு முன்பு மலை உச்சியை அடைய வேண்டும் என்ற ஆவலில் ஓடும் கேபிள் காரிலிருந்து குதித்தனர்.

ஒரு இளம்பெண் பத்திரமாக பனியில் குதித்ததால் எந்த பிரச்சினையுமின்றி தப்ப, இன்னொரு இளம்பெண்ணோ பனிக்கடியில் மறைந்திருந்த பாறையின் மீது மோதி விழுந்தாள்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவள், வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த துயர சம்பவம் Barrauteஇலுள்ள Mont-Vidéo பனிச்சறுக்கு ரிசார்ட்டில் நடைபெற்றது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers