கனடாவில் 2019ல் குடியேறப்போகும் புலம்பெயர்ந்தவர்கள்! எண்ணிக்கை வெளியானது

Report Print Balamanuvelan in கனடா

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கனடா அரசாங்கம் 980,000பேருக்கு புதிய நிரந்தர வாழிட உரிமங்களை வழங்கும் நோக்கில் 2018-2020ஆம் ஆண்டுக்கான மூன்றாண்டு புலம்பெயர்தல் திட்டத்தை வெளியிட்டது.

Express Entry திட்டம் மூலமாக 242,100பேர் நாட்டிற்குள் வரவிருக்கும் நிலையில், புதிதாக நிரந்தர வாழிட உரிமம் பெறுவோரில் பெரும்பாலோர் பொருளாதார புலம்பெயர்வோராக குடியேறுவர் என்று அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆறு மாதங்கள் அல்லது அதற்கு குறைவான காலகட்டத்தில் செயல்படுத்தப்படும் Express Entry திட்டம் கனடாவுக்குள் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களை கொண்டுவருவதற்கும், அயல் நாட்டு பணியாளர்களையும் பட்டதாரிகளையும் நிரந்தர வாழிட உரிமம் பெற்றோர் என்ற நிலைக்கு மாற்ற உதவுவதற்கும் வெற்றிகரமான திட்டம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஃபெடரல் அரசாங்கமும் 183,800 புதிய நிரந்தர வாழிட உரிமம் பெற்றோரை குடியமர்த்த, Provincial Nominee Programs (PNPs) என்னும் திட்டத்தின் மூலமாக மாகாணங்களுடன் இணைந்து தொடர்ந்து செயல்படும் என்றும் அத்துடன் குடியுரிமை பெற்றோரின் மற்றும் நிரந்தர வாழிட உரிமம் பெற்றோரின் கணவன்/மனைவிகள், இணைந்து வாழ்வோர், குழந்தைகள், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகள் என 265,500பேரையும் Family Class programs திட்டத்தின் கீழ் கனடா வரவேற்க உள்ளதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, கனடா, 137,350 அகதிகளையும், மனித நேய அடிப்படை மற்றும் இன்ன பிற காரணங்களுக்காக 12,250 பேரையும் குடியமர்த்துவதன் மூலம் தேவையிலிருப்போருக்கு உதவும் தனது பாரம்பரியத்தை தொடர்ந்து கைக்கொள்வதை உறுதி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மொத்தத்தில், கனடா அரசாங்கம் 2018இல் 310,000பேரை வரவேற்றுள்ளதோடு, 2019இல் 330,000பேரையும், 2020இல் 340,000பேரையும் வரவேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பின்னர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் புலம்பெயர்தல் தொடர்பில் இன்னும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அதன்படி, 2021ஆம் ஆண்டு வருடாந்திர புலம்பெயர்வோர் எண்ணிக்கை 350,000ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய புலம்பெயர்வோர் எண்ணிக்கை திட்டம் அடுத்த மூன்றாண்டுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்வோரை இலக்காக கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை கனடா நிறைவேற்றினால், கனடாவின் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் அதிகரிக்கும்.

புதிய திட்டத்தின்படி 2019இல் 330,800பேரும், 2020இல் 341,000பேரும், 2021இல் 350,000பேரும் வரவேற்கப்பட உள்ளதையடுத்து புலம்பெயர்வோரின் மொத்த எண்ணிக்கை 1,021,800 ஆக உயரும்.

இந்த புதிய எண்ணிக்கைகள் முதலாவதாக 2017ஆம் ஆண்டு போடப்பட்ட திட்டத்தின் அடிப்படையிலேயே அறிவிக்கப்பட்டுள்ளன.

Economic Class வகுப்பைச் சேர்ந்தவர்களே அதிகம் லாபமடையும் இத்திட்டத்தின் மூலம், 2021 வரை 202,300பேர் வரவேற்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்தல் துறை அமைச்சரான Hussen, இந்த எண்ணிக்கை அதிகரிப்பின் மைய நோக்கம் வர்த்தகத்தை ஆதரிப்பதும் கனடாவின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதும் ஆகும் என்றார்.

கடந்த ஆண்டு வலிமையான அஸ்திபாரம் இடப்பட்ட இத்திட்டத்தின்மேல், தொடர்ந்து பொருளாதார புலம்பெயர்தலை அதிகரிப்பது, மற்ற நாடுகளுடன் போட்டியிடும் தரத்தில்

கனடாவை நிலைக்கச் செய்வதோடு, உலகம் முழுவதிலும் இருந்து திறமையுள்ளோரை ஈர்க்க உதவும் என்றார் அவர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்