கனடாவில் பெண்களை தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளி சிக்கினான்: புகைப்படம் வெளியிடப்பட்டது

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் தொடர்ச்சியாக பெண்களைத் தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளி சிக்கியுள்ள நிலையில், டொராண்டோ பொலிசார் அவனது படத்தை வெளியிட்டு அவனால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரேனும் இருந்தால் பொலிசாரை தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

அக்டோபர் 24க்கும் டிசம்பர் 20க்கு இடையில் தொடர்ச்சியாக ஐந்து பெண்கள் யார்க் பல்கலைக்கழகத்தின் அருகில் ஒரு நபரால் தாக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்கள்.

ஒரு பெண் ஆயுதம் ஒன்றினால் பலமாக தாக்கப்பட்டு சுயநினைவிழக்கச் செய்யப்பட்டு பின்னர் மறைவான ஒரு இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறார்.

இன்னொரு பெண் கத்தி முனையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். ஐந்து பேரையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தது Inzaghi Regis (20) என்னும் நபர்தான் என்று பின்னர் தெரியவந்தது. பொலிசார் Inzaghi Regisஐக் கைது செய்து காவலில் அடைத்தனர்.

ஐந்து பேரை அவன் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிசார் நம்பியிருந்த நேரத்தில், 23 வயது பெண் ஒருவர் தன்னையும் Inzaghi Regis பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகாரளிக்க, இன்னும் பலர் அவனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பொலிசாருக்கு ஏற்பட்டது.

இதனால் அவனது படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் வேறு யாரேனும் Inzaghi Regisஆல் பாதிக்கப்பட்டிருந்தால், முன்வந்து புகாரளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஜனவரி மாதம் 8ஆம் திகதி Inzaghi Regis மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறான்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers