எட்டு வருட வாழ்வை கெடுத்த ஆசிரியையின் ஒரு நிமிட ஆபாச நடனம்

Report Print Balamanuvelan in கனடா

எட்டு வருடங்களுக்கு முன்பு கலை நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நிமிட நடனம் ஒன்று ஆடினார் ஒரு ஆசிரியை.

அது தனது வாழ்வையே குலைத்துவிடும் என்று அவர் அப்போது நினைக்கவில்லை. Winnipeg ஆசிரியையான Chrystie Fitchner தனது சக ஆசிரியரான Adeil Ahmed என்னும் ஆசிரியருடன் இணைந்து கலை நிகழ்ச்சி ஒன்றில், சக ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் நடனம் ஆட சம்மதித்தார்.

ஆனால் Adeil Ahmed அந்த நடனத்தை வேறு மாதிரியாக மாற்றி விட்டார். மொத்தத்தில் அது ஒரு ஆபாச அசைவுகளுடன் கூடிய நடனமாகி விட்டது.

அந்த வீடியோ உலகம் முழுவதும் சமூக ஊடகங்களில் வெளியாக, பெற்றோர்கள் உட்பட பல தரப்பிலிருந்தும் அதற்கு கடும் கண்டனம் கிளம்பியது.

வீடியோவை காண

அதோடு முடியவில்லை, Chrystie நீச்சல் உடையில் இருக்கும் ஒரு படம் பேஸ்புக்கிலிருந்து எடுக்கப்பட்டு எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டது. அவர் படங்களில், முகத்தில் சாணி அடிக்கப்பட்டது.

அவர் வேலை போனது, வீட்டை காலி செய்ய சொன்னார்கள், காரிலும் நண்பர்கள் வீட்டு சோஃபாவிலும் உறங்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் Chrystie.

பார்க்கிறவர்கள் எல்லாம் அவமானப்படுத்த, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று கூட நினைத்தார் Chrystie.

பிழைப்புக்காக Winnipegக்கு வெளியே சிறு சிறு வேலைகள் செய்த Chrystie, இனிமேல் முழு நேர ஆசிரியையாக வேலை செய்யமுடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

பல ஆண்டுகள் கனடாவுக்கு வெளியே வேலை செய்த Chrystie, ஒரு நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும், அவரால் தான் பயிற்சி பெற்ற வேலையான ஆசிரியை வேலையை மட்டும் செய்ய இயலாமல் போனது இன்னும் கோபத்தையும் மனக்கசப்பையும் மிச்சம் வைத்திருப்பதாக தெரிவிக்கும் அதே நேரத்தில், இதுவும் ஒரு நாள் மாறும் என்று நம்புகிறார் அவர்.

உலகம் முழுவதும் பார்க்கப்பட்ட தனது நடன வீடியோ, இன்னும் தனது வாழ்வை பாதிக்குமோ என்ற அச்சம் இன்னும் இருப்பதாகவும் தெரிவிக்கிறார் அவர்.

முழு நேர ஆசிரியை வேலை கிடைக்காது என்று தெரிந்தும் ஆசிரியை வேலைக்கு ஆசைப்பட்டாலும், ஒருபோதும் தனது சொந்த ஊராகிய Manitobaவுக்கு மட்டும் திரும்ப மாட்டேன் என்கிறார் Chrystie.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...