பூர்வக்குடியினருக்காக இந்திய வம்சாவளியின இளம்பெண் செய்யும் நெகிழ்ச்சி செயல்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் பூர்வக்குடியினரின் உணவுப் பிரச்சினை உலகறிந்ததே, இந்நிலையில், இந்திய வம்சாவளியினரான ஒரு இளம்பெண், தனது பைலட் உரிமம் பெற்ற உடனேயே அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற இலட்சியத்துடன் அவர்களுக்காக டன் கணக்கில் உணவு கொண்டு செல்லவுள்ளார்.

Winnipegஐச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான Andi Sharma, Manitobaவின் வடக்கு பகுதியில் வாழும் பூர்வக்குடியினருக்காக ஒரு பெரிய மாற்றத்தை செய்ய முடிவு செய்துள்ளார்.

விமானம் ஒன்றில் 350 பவுண்டுகள் உணவுப்பொருட்களுடன் Manitobaவின் வடக்கு பகுதிக்கு பறக்க முடிவு செய்துள்ளார் அவர்.

பல ஆண்டுகளாக Andi Sharma உணவுப் பிரச்சினைகள் தொடர்பில் பணி செய்து வருகிறார். சமீபத்தில் தனது பைலட் லைசன்ஸை பெற்றுக் கொண்ட Andi Sharma, Manitobaவின் வடக்கு பகுதிக்கு உணவுப்பொருட்களுடன் பறக்க முடிவு செய்துள்ளார்.

களத்தில் இறங்கிப் பணியாற்றுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் Andi Sharma, உணவுப் பொருட்களை வழங்குவதற்காக தனக்கு உதவிய Winnipeg மக்களின் பெருந்தன்மை தன்னை நெகிழச் செய்து விட்டதாக தெரிவிக்கிறார்.

ஒரு முறை உணவு பொருட்களை வழங்குவதன்மூலம் வடக்கிலுள்ள மக்களின் உணவுப் பிரச்சினையை தீர்த்து விடமுடியாது என்பது தனக்குத் தெரியும் என்று கூறும் Andi Sharma, தன்னால் இந்த உதவியையாவது செய்ய முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கிறார்.

தான் ஒரு சிறுமியாக இருக்கும்போது தனது தாயார், உலகத்திற்கு தேவையான எல்லா உதவிகளையும் உன்னால் செய்ய இயலாது என்றாலும், உன்னால் செய்ய இயன்ற உதவிகள் எல்லாம் உலகத்துக்கு தேவையானவைதான் என்று கூறியதை நினைவு கூறுகிறார் Andi Sharma.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers