கனடாவில் நெடுஞ்சாலையில் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற நபர் மீது டிரக் லொறி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நோவா ஸ்கோடியாவில் உள்ள Cabot Trail நெடுஞ்சாலையில் 31 வயதான நபர் ஒருவர் திங்கட்கிழமை காலை நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த டிரக் லொறி அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து இறந்தவரின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

டிரக் லொறியை ஓட்டி வந்த ஓட்டுனருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் நடந்த சில மணி நேரத்துக்கு குறித்த சாலை மூடப்பட்டது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers