ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் வாழ்ந்த சிறுமி: பிறந்தநாளில் நிகழ்ந்த அற்புதம்

Report Print Balamanuvelan in கனடா

எங்கு சென்றாலும் ஆக்சிஜன் சிலிண்டர்களை உடன் சுமந்துகொண்டே செல்லவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்த ஒரு சிறுமிக்கு, அவளது பிறந்த நாள் அன்று இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு இதயம் கிடைத்துள்ளதால், ஒரு அற்புதம் நடந்திருப்பதாக கூறி அவளது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

கனடாவின் Windsorஇல் பிறந்தவள் McKayla (8), பிறக்கும்போதே அவளது இதயத்தின் இடது பாகம் முழுமையாக உருவாகவில்லை.

அதனால் எங்கு சென்றாலும் McKaylaவின் பெற்றோர் தங்களுடன் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துக் கொண்டே செல்வார்கள்.

எங்கு சென்றாலும், ஆக்சிஜன் தீர்ந்து விடக்கூடாது என்பதற்காக, வீட்டுக்கு குறித்த நேரத்திற்குள் வருவதிலேயே குறியாக இருப்பார்கள் அவளது பெற்றோர்.

McKayla இதய அறுவை சிகிச்சைக்காக 480 நாட்களாக காத்திருந்த நிலையில், அவள் தனது எட்டாவது பிறந்த நாளில் கால் வைத்ததும் ஒரு நல்ல செய்தி கிடைத்தது, அது அவருக்கு பொருத்துவதற்கு ஒரு இதயம் கிடைத்து விட்டது என்பதுதான்.

12 மணி நேர அறுவை சிகிச்சையில் McKaylaவுக்கு புதிய இதயம் பொருத்தப்பட்டது.

வெகு சில நாட்களிலேயே ஆச்சர்யப்படும் விதமாக McKaylaவின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

அவள் மயக்கத்திலிருந்து வெளி வரவே சில வாரங்கள் ஆகும் என்று நினைத்திருந்த நிலையில், அவள் எழுந்து உட்கார்ந்தாள், தண்ணீர் குடித்தாள், முன்போலவே அவள் செய்யும் எல்லா வேலைகளையும் சாதாரணமாக செய்ய ஆரம்பித்து விட்டாள் என்கிறார், McKaylaவின் தந்தையான Justin Warder.

இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வர இருக்கும் நிலையில், தனது மகளின் முகத்தின் புன்னகையைக் காண்பதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கும் Justin Warder, அவள் மருத்துவமனையில் இல்லாமல் குடும்பத்துடன் வீட்டில் இருப்பது தன்னை உற்சாகப்படுத்தியுள்ளதாகவும் இதைவிட வேறு பெரிய சந்தோஷம் என்ன இருக்க முடியும் என்றும் கூறுகிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers