கனடா கிங் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் பொதுமக்கள் வெளியேற்றம்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் டொரோண்டோ நகரில் மர்ம நபர்களிடம் இருந்து வெடிகுண்டு அச்சுறுத்தல் வெளியான நிலையில் நகரம் முழுவதும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டொரோண்டோ நகரில் அமைந்துள்ள கிங் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் இருந்து வியாழனன்று பகல் 1 மணியளவில் மர்ம நபர் ஒருவரிடம் இருந்து இந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்பு பொலிசாருக்கு வந்துள்ளது.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட பொலிசார், உடனடியாக கிங் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் இருந்து பொதுமக்களை வெளியேற்றியுள்ளனர்.

ஆனால் வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கொண்ட சோதனையில் குறித்த ரயில் நிலையத்தில் வெடிகுண்டு எதுவும் ரயில் நிலையத்தில் இருந்து கண்டெடுக்கப்படவில்லை என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி டொரோண்டோ நகரின் முக்கிய பகுதிகளில் இருந்தும் வெடிகுண்டு அச்சுறுத்தல் வந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers