கனடாவிலிருந்து சுற்றுலா சென்று மாயமான இளம் பெண்ணுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் Quebecஇலிருந்து மெக்சிகோவுக்கு தனது ஆண் நண்பர் ஒருவருடன் சுற்றுலா சென்றார் Christine St-Onge (41).

பின்னர் Christineஇன் ஆண் நண்பர் மட்டும் கனடா திரும்பினார்.

கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து Christineஇடமிருந்து தகவல் எதுவும் வரவில்லை, அவர் எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை.

இந்நிலையில், Quebec திரும்பிய Christineஇன் நண்பர் ஊர் திரும்பிய அடுத்த நாள் இறந்து கிடந்தார்.

பொலிஸ் விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. Christine எங்கிருக்கிறார் என்பது தெரியாததால், இந்த தகவலை அவருக்கு தெரியப்படுத்தக் கூட இயலாத சூழல் நிலவுகிறது.

Christineஉடன் சென்ற ஆண் நண்பருக்கும் அவருக்கும் நடுவே எவ்வித உறவு இருந்தது என்பது குறித்து தெரியப்படுத்தப்படவில்லை.

Christineஇன் ஆண் நண்பரின் தற்கொலை குறித்து தொடர்ந்து பொலிசார் விசாரித்து வரும் நிலையில் Christineஐக் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் தங்களுக்கு தெரியப்படுத்துமாறு பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர் பொலிசார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers