குழந்தைகள் இல்லா தம்பதிக்கு இலவசமாக குழந்தைகள் பெற்றுத் தரும் பெண்: சொன்ன வித்தியாசமான காரணம்

Report Print Santhan in கனடா

கனடாவில் குழந்தை இல்லா தம்பதிக்கு குழந்தை பெண் ஒருவர் இலவசமாக குழந்தை பெற்றுத் தரும் சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

கனடாவைச் சேர்ந்தவர் மரிசா. இவர் குழந்தை இல்லா தம்பதிக்கு உதவும் நோக்கமாக இலவசமாக குழந்தைகளை பெற்றுத் தருகிறார்.

அதற்காக 10 மாதம் குழந்தைகளை சுமந்து 16 மணி நேரம் பிரசவ வலியை அனுபவிக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஸ்பெயினை சேர்ந்த ஜீசஸ், ஜூலியோ என்ற தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமையால் தவித்தனர்.

அப்போது அவர்களுக்கு பெண் குழந்தை பெற்றுக் கொடுத்தேன். அதற்கு மலேனா என்று பெயர் வைத்தனர். அந்த குழந்தை 4.17 கிலோ எடையுடன் நலமாக உள்ளது.

மரிசா "மலேனா" என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்து தந்துள்ளார். அந்த குழந்தை 4.17 கிலோ எடையுடன் நலமாக உள்ளது.

நான் இவர்களுக்கு ஒரு குழந்தையை மட்டும் உருவாக்கவில்லை, நன் ஒரு பாரம்பரியத்தையே உருவாக்குகிறேன்.

குழந்தையை பிறருக்கு கொடுக்கிறாயா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இது ஒன்றும் என் குழந்தை இல்லை கருமுட்டையும், விந்தணுவும் சேர்ந்த தருணம் முதலே இது அவர்களின் குழந்தை . நான் ஒரு குழந்தைக்கு காவல் இருப்பது போலவே உணர்கிறேன்.

கனடாவில் பணம் வாங்கும் வாடகைத் தாய் முறை சட்டவிரோதமானது. அமெரிக்காவில் வாடகை தாய் கருவை சுமக்க 60,000 - 1,20 ,000 டொலர் பணம் பெறுவார்கள்.

கனடாவில் நாங்கள் அப்படி செய்யவில்லை . நான் ஒன்றும் குழந்தை பெரும் இயந்திரம் இல்லை என்று கூறியுள்ளார்.

பரந்த மனம் உள்ள ஒரு வலிமையான பெண்ணால் குழந்தை மலேனா இந்த உலகத்திற்கு வந்திருக்கிறாள். அந்த குழந்தை தற்போது 4.17 கிலோ எடையுடன் நலமாக உள்ளது. மலேனா தன் தாய் தந்தையுடன் தற்போது ஸ்பெயின் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers