பாலத்தின் தடுப்புச்சுவரில் வேகமாக மோதிய கார்: நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் வேகமாக மோதிய நிலையில் காரில் இருந்த ஓட்டுனர் உயிரிழந்தார்.

Ponoka நகர் அருகில் உள்ள பாலத்தில் கார் ஒன்று நேற்று வேகமாக சென்று கொண்டிருந்தது.

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நேராக பாலத்தின் தடுப்புசுவரின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரில் இருந்த ஓட்டுனர் படுகாயமடைந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்த நிலையில் ஓட்டுனரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி 22 வயதான ஓட்டுனர் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், இந்த விபத்தில் வேறு வாகனம் எதுவும் சம்மந்தப்படவில்லை.

விபத்துக்குள்ளான காரில் ஓட்டுனர் மட்டுமே இருந்தார், சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers