கனடாவில் எய்ட்சைக் குணமாக்கும் அற்புத மருந்து விற்றவர் கைது

Report Print Balamanuvelan in கனடா

எய்ட்ஸ், புற்றுநோய் மற்றும் ஆட்டிஸம் உட்பட பல நோய்களை குணமாக்கும் அற்புத மருந்தை விற்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Stanley Nowak (67) எய்ட்ஸ், புற்றுநோய் மற்றும் ஆட்டிஸம் உட்பட பல நோய்களை குணமாக்கும் மருந்து என்று கூறப்படும், அற்புத மினரல் திரவம் என்று அழைக்கப்படும் ஒரு சர்ச்சைக்குரிய டானிக்கை விற்பனை செய்ததாக உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் சட்டத்தின்கீழ் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்மீது உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் சட்டத்தின்கீழ் 17 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு, அதன்பின் இரண்டு ஆண்டுகள் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Stanley Nowak, கனடாவில் இத்தகைய குற்றத்திற்காக தண்டனை பெறும் முதல் நபர் ஆவார்.

அற்புத மினரல் திரவம் என்று அழைக்கப்படும் டானிக்கின் அபாயம் குறித்து கனடாவின் சுகாதாரத்துறை பல ஆண்டுகளாகவே எச்சரித்து வந்துள்ளது.

அற்புத மினரல் திரவம் என்பது உண்மையில் ஆடை தயாரிப்பில் துணிகளை பிளீச் செய்ய பயன்படுத்தப்படும் மற்றும் டிடர்ஜண்டில் பயன்படுத்தப்படும் சோடியம் குளோரைட் (Sodium chlorite) எனப்படும் வேதிப்பொருளைக் கொண்டுள்ள ஒரு திரவமாகும்.

அதை உட்கொண்டால், நச்சுத்தன்மை, சிறுநீரக செயலிழப்பு மற்றும் இரத்த சிவப்பணுக்கள் பாதிப்பு உட்பட பல மோசமான உடல் நலப்பிரச்சினைகள் ஏற்படும்.

கைது செய்யப்பட்டுள்ள Nowak, முதல் ஆறு மாதங்களுக்கு வீட்டுச் சிறையில் வைக்கப்படுவார்.

பின்னர் அடுத்த 18 மாதங்களுக்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரை அவர் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.

அத்துடன் அவரது கணினி, தொலைபேசி போன்ற மின்னணுக் கருவிகளும் கண்காணிப்பில் இருக்கும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers