கனடாவுக்கு கடிதங்கள் அனுப்பாதீர்கள்: உலகிற்கு கனடா விடுத்துள்ள வேண்டுகோள்

Report Print Balamanuvelan in கனடா

கனடா தபால் துறையில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்று வருவதையடுத்து, தபால் பட்டுவாடா செய்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், இனி கனடாவுக்கு கடிதங்கள் அனுப்ப வேண்டாம் என கனடா தபால் துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கனடா தபால் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஐந்தாவது வாரத்தை அடைந்துள்ள நிலையில், தபால் பட்டுவாடா செய்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதையடுத்து தபால் துறை, வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

விடுமுறை நாட்கள் நெருங்கி வரும் நிலையில், வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டியிருக்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாடுகளிலிருந்து வரும் கடிதங்களை ஏற்றுக்கொள்ள இயலாத நிலைமையிருப்பதாக கனடா தபால் துறை தெரிவித்துள்ளது.

சுழற்சி முறை வேலை நிறுத்தங்கள், முக்கிய நகரங்களான டொராண்டோ, Winnipeg மற்றும் Vancouver உட்பட பல நகரங்கள் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டொராண்டோவில் மட்டுமே 260 வாகனங்களிலும் Vancouverஇல் 100 வாகனங்களிலும் பார்சல்களும் பாக்கெட்களும் பட்டுவாடா செய்யப்படுவதற்கு காத்திருக்கின்றன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்