உயிரிழந்த கணவரின் உடல் தோல்களை வெட்டி பாதுகாக்கும் மனைவி: மனதை உருக்கும் பின்னணி

Report Print Raju Raju in கனடா

கனடாவில் உயிரிழந்த கணவரின் உடல் தோல்களை பத்திரிப்படுத்தி வைத்திருக்கும் மனைவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ் என்பவர் பச்சைக்குத்தும் தொழில் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் உடலின் பல பகுதிகளில் பச்சை குத்தியிருந்தார்.

இந்நிலையில் குடல்புண் நோயால் பாதிக்கப்பட்டிருந்த கிறிஸ் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து கிறிஸ் நினைவாக அவரின் மனைவி கிரயல் வென்சில் நெகிழ்ச்சியான விடயத்தை செய்துள்ளார்.

அதாவது கிறிஸின் உடல் தோல்களை தனியாக வெட்டி பதப்படுத்தியுள்ளார் கிரயல்.

இதன் மூலம் காலத்துக்கும் அழியாத வகையில், கிறிஸ் உடல் தோல்களின் மேல் பச்சைக்குத்தியுள்ளதை தனது வீட்டு சுவரில் ஓவியம் போல கணவர் நினைவாக மாட்டவுள்ளார் கிரயல்.

இது குறித்து கிரயல் கூறுகையில், என் கணவர் கிறிஸ் இறப்பதற்கு முன்னர் தனது கடைசி ஆசையை என்னிடம் கூறினார்.

அதாவது பச்சைக்குத்தி கொண்ட தனது தோல்களை பத்திரமாக வைத்து கொள்ளும்படி கூறினார்.

அதன்படி இதை செய்யவுள்ளேன், இது காலத்தால் அழியாமல் இருக்கும்.

இதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. வட அமெரிக்காவில் $80,000 பணத்தில் இந்த விடயத்தை மேற்கொள்ளவுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்