கடத்தப்பட்ட மகனை 31 வருடங்களுக்கு பிறகு சந்தித்த தாய்: நெகிழ்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in கனடா

கனடாவில் கடத்தப்பட்ட மகனை 31 வருடங்களுக்கு பிறகு சந்தித்த தாய் ஒருவர் தன்னுடைய நெகிழ்ச்சியான தருணம் பற்றி விவரித்துள்ளார்.

கனடாவின் டொரோண்டோ நகரத்தை சேர்ந்த லீனத், தன்னுடைய கணவர் ஆலன் மேன் (66) உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1986ம் ஆண்டு அவரை விட்டு பிரிந்து சென்றார்.

அதன் பிறகு 1987ம் ஆண்டு ஜூன் 24 ம் தேதியன்று, 22 மாத குழந்தையான லீனத் மகன் ஜெர்மைனை, பிரிந்து சென்ற தந்தை ஆலன் கடத்தி சென்றுள்ளார்.

இதனையடுத்து லீனத் கொடுத்த புகாரின் அடிப்படையில் கனடா பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் , கூட்டாட்சி மானிய வீடுகளில் வாடகை அலகுக்கு விண்ணப்பிக்கும்போது, பிறப்பு சான்றிதழ் போலியாக இருப்பது பொலிஸாரால் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து கடந்த 26-ம் தேதி ஆலனை கைது செய்த போலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொள்கையில், கனடாவில் இருந்து குழந்தையை கடத்தி வந்து சட்டவிரோதமாக குடியேறியிருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் தற்போது கனடா பொலிஸாரிடம் குற்றவாளியை ஒப்படைக்கும் வேலைகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் 31 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய மகனை சந்தித்துள்ள அவருடைய தாய் லீனத் பேசுகையில், "நான் என்னுடைய மகனை பிடித்துக்கொண்டு, அவன் உண்மையில் என் மகன்தானா என்பதை உணர்ந்தேன்.

நான் அவரைத் தொட்டு, 'என் குழந்தை' என்றேன். அவர், "ஓ மம்மி, உங்களுக்கு என்னை போன்ற கண்கள்" என்று பதிலளித்தார் என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers