மோட்டாரை சரிபார்க்க கிணற்றுக்குள் இறங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கோரம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் வீட்டில் தண்ணீர் வராததால் மோட்டாரை சரிபார்ப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய ஒரு பெண் தவறி விழுந்ததில் அவர் பாக்கெட்டில் இருந்த ஸ்குரூடிரைவர் அவரது வயிற்றைக் குத்திக் கிழித்ததுடன் அவரது காலும் உடைந்தது.

Saskatchewanஇலுள்ள Candoவில் தனது குடும்பத்தினருடன் வசிக்கும் Chrissy Gamble, வீட்டில் தண்ணீர் வராததால் மோட்டாரை சரிபார்ப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கியிருக்கிறார்.

அந்த கிணற்றுக்குள் ஏணி ஒன்றைப் பயன்படுத்தி அவர் இறங்கும்போது திடீரென ஏணி நழுவ, சுமார் மூன்று மாடிக் கட்டிடம் அளவுக்கு ஆளமான அந்தக் கிணற்றுக்குள் விழுந்தார் Chrissy.

விழும்போது கால் ஏணிப்படியில் சிக்கிக் கொள்ள உடனடியாக அது உடைந்தது.

அவரது பாக்கெட்டிலிருந்த ஸ்குரூடிரைவர் அவரது வயிற்றைக் குத்திக் கிழித்தது.

உறையும் அளவிற்கு குளிர்ச்சியான தண்ணீரில் விழுந்ததால் அவரால் அந்த காயங்களின் வலியை உணர இயலவில்லை.

நல்ல வேளையாக அன்று அவர் வீட்டில் தனியாக இல்லை.

அவருடன் அவரது கணவர், மாமனார், அவரது இளைய மகள் ஆகியோரும் வீட்டில் இருந்ததால், அவரது இளைய மகளான 11 வயது Tia, ஓடிச் சென்று பக்கத்திலுள்ள பள்ளியின் ஊழியர்களை உதவிக்கு அழைத்திருக்கிறாள்.

உடனடியாக வந்த மீட்புக் குழுவினர் விரைந்து Chrissyயை கிணற்றிலிருந்து தூக்கி மருத்துவமனை கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.

வயிறு கிழிந்து ரத்தம் கொட்ட, கால் உடைந்து தொங்க, அந்த சூழ்நிலை ஒரு ஹாரர் படத்தைப் போல் இருந்தது என்கிறார் Chrissy.

தன்னைக் காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்ளும் Chrissy, அவர்கள் அன்று சரியான நேரத்திற்கு வராமல் இருந்திருந்தால் தன் நிலைமை என்ன ஆகியிருக்குமோ என திகிலுடன் தெரிவிக்கிறார்.

தனது காலில் நிரந்தரமாக பொருத்தப்பட்ட பிளேட் மற்றும் ஸ்குரூக்களோடு வாக்கர் உதவியுடன் நடமாடும் Chrissyயின் வயிற்றிலிருந்து இப்போதுதான் தையல் பிரிக்கப்பட்டுள்ளது.


மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers