கனடாவில் மந்திரவாதிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Report Print Balamanuvelan in கனடா

இன்றைய நிலவரப்படி கனடாவில் மந்திர தந்திரம் செய்வதும், சூனியம் வைப்பதும், எடுப்பதும், ஜோதிடம் கூறுவதும் சட்டப்படி குற்றமாகும்.

ஆனால் சூனியம் வைப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுபவர்களை குற்றவாளிகளாக்கும் கனடா குற்றவியல் சட்டம் பிரிவு 365ஐ அகற்ற கனடாவின் ஃபெடரல் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாதம் ஒண்டாரியோ பொலிசார் 27 வயது பெண் ஒருவரை சூனியம் எடுப்பதாக ஏமாற்றி பணம் பறித்த குற்றத்திற்காக கைது செய்தனர்.

சமீபத்தில் இன்னொரு ஒண்டாரியோ பெண்ணும் சூனியம் வைப்பது, ஜோதிடம் சொல்வது என பல வழிகளில் மக்களை ஏமாற்றி, மிரட்டி 5000 டாலர்கள் வரை பறித்ததற்காக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த சட்டம் நீக்கப்படுவதால் இனி கனடாவில் யார் வேண்டுமானாலும் மந்திர தந்திரங்கள் செய்யலாம், சூனியம் வைக்கலாம், எடுக்கலாம்.

ஆனாலும் ஒரு பிரச்சினை, மந்திர தந்திரங்கள் செய்வதுபோல் ஏமாற்றினால் மோசடி செய்த குற்றத்திற்காக சட்டம் தனது கடமையைச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers