கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்: உடன் இருந்த ஆணுக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in கனடா

கனடாவில் மலை குன்றிலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் செயிண்ட் ஜான் நகரில் தான் இச்சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது.

இரவு 12.20 மணிக்கு பொலிசாரின் அவசர உதவி எண்ணுக்கு போன் வந்தது.

அதில், கோல்டன் க்ரோவ் பகுதியில் உள்ள மலை குன்றின் மேலிருந்து ஒரு ஆணும், பெண்ணும் கீழே விழுந்து விட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் விரைந்தனர். அங்கு படுகாயங்களுடன் பெண் ஒருவர் சடலமாக கிடந்தார்.

அருகில் இருந்த ஆண் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை விபத்தாக கருதும் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...