கனடாவில் புகைத்தலுக்கான தடையை வரவேற்கும் மக்கள்

Report Print Kavitha in கனடா

கனடாவில் நோவா ஸ்கொட்ஷியாவின் தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில் பிராந்திய எல்லைக்குள் புகைத்தலுக்கு தடை செய்யப்பட்டுள்ளது இதனை பெருமளவான மக்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த தடையின் மூலம், சிறந்த எதிர்கால சந்ததியினை கட்டியெழுப்ப முடியுமெனவும், சுகாதாரமான சூழல், ஆரோக்கியமான வாழ்வு என ஏராளமான நன்மைகள் கிட்டும் என மக்கள் கூறுகின்றார்கள்.

ஹலிஃபெக்ஸ்ஸில் புகைப்பதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர, ஏனயை இடங்களில் புகைக்கும் குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு 25 டொலர்களில் இருந்து 2,000 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைக்கும் பழக்கத்தை உடையவர்களுக்கு பேரூந்து தரிப்பிடங்கள் உட்பட ஒன்பது இடங்களில் புகைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்பதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர, ஏனைய இடங்களில் சுருட்டு உள்ளிட்ட நெருப்பில் புகையும் பதார்த்தங்கள் மட்டுமின்றி, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள மின்சுருட்டுக்களையும் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.

நகரில் புகைப்பதற்கு என்று மேலும் 30 இடங்களில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி மன்றம் அறிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்