வெளிநாட்டுக்கு சென்று போதையில் மோசமான செயலை செய்த கனடிய பெண்: சிசிடிவி காட்சி வெளியானது

Report Print Raju Raju in கனடா

தாய்லாந்துக்கு சென்ற கனடிய பெண்ணும், பிரித்தானிய இளைஞரும் அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க சுவற்றை சேதப்படுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவை சேர்ந்த பிரிட்னி (23) என்ற பெண்ணும், பிரித்தானியாவை சேர்ந்த லீ என்ற இளைஞரும் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்நிலையில் பாங்காக்கில் உள்ள 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட Tha Pae Gate மீது இருவரும் பெயிண்டால் கிறுக்கியுள்ளனர்.

இது அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவானது. இதை வைத்து பொலிசார் பிரிட்னி மற்றும் லீயை கைது செய்தனர்.

இருவர் மீதும் பண்டைய கால சிறப்புமிக்க விடயத்தை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றத்துக்கு இருவருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் $30,650 அபராதமும் விதிக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசார் விசாரணையில் இருவரும் மதுபோதையில் இச்செயலை செய்தது தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்