கனடாவில் குறிசொல்லும் பெண்ணால் 60,000 டொலர் தொகையை இழந்த நபர்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் தென் ஒன்ராறியோவில் பெண்மணி ஒருவர் குறிசொல்வதாக கூறி நபர் ஒருவரிடம் இருந்து பெரும் தொகை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஒன்ராறியோவின் மில்டன் நகரில் குறித்த ஏமாற்று நாடகம் அரங்கேறியுள்ளது.

கடந்த மே மாதம் ஹால்டன் பிராந்திய பொலிசாரை அணுகிய நபர் ஒருவர் அப்பகுதியில் குறிசொல்லும் பெண்மணியிடம் தாம் சுமார் 60,000 டொலர் தொகையை இழந்ததாகவும், அதை மீட்டுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், 32 வயது டோரி ஸ்டீவன்சன் என்ற பெண்மணியை கைது செய்துள்ளனர்.

இவர் குறிசொல்லுவதை மில்டன் பகுதி நகர நிர்வாகத்திடம் பதிவு செய்து தொழிலாக செய்து வந்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் இவர் ஏராளமானவர்களிடம் ஆயிரக்கணக்கன டொலர் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

மக்களின் நம்பிக்கையை தமக்கு சாதகமாக பயன்படுத்திய இவர் அவர்களை கட்டாயப்படுத்தி பணம் வசூலித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளது வெளியே தெரியாமல் இருக்க பலரும் பொலிசாரை அணுகவில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், குறித்த பெண்மணி தொடர்பில் ஏமாற்றப்பட்டவர்கள் பொலிசாரை அணுகி தகவல்களை தெரிவிக்கலாம் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்