கனடாவின் ரொறன்ரோ பகுதிகளில் பனிப்பொழிவு : வாகன சாரதிகளுக்கும் எச்சரிக்கை

Report Print Kavitha in கனடா

கனடாவில் ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குளிர்காலநிலை காரணமாக பனிப்பொழிவு நேற்று ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் பனிபொழிவானது நேற்று காலை ஏற்பட்டதாக சுற்றுச் சூழல் கனடா தெரிவித்துள்ளது

ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளான, வடக்கு யோர்க், டர்ஹாம் பகுதிகள், நியூமார்க்கெட்டிலிருந்து ஹூரன்-பெர்த் மற்றும் பார்ரி பகுதிகளுக்கே சிறப்பு வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதியூடான வீதிகளை பயன்படுத்துபவர்கள் பனிப்பொழிவு தொடர்பில் கூடிய அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாகனம் செலுத்தும் போது முன் 200 மீற்றருக்கு எந்த அசைவும் தெரியாது என்றும் இதனால் மின் விளக்குகளை ஒளிரச்செய்து வாகனத்தை செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்