உன் பிள்ளைகளை தாக்குவோம்: மிரட்டல் கடிதத்திற்கு பயந்து வீட்டை காலி செய்யும் இந்திய குடும்பம்

Report Print Balamanuvelan in கனடா

வீட்டைக் காலி செய்து விட்டு ஓடாவிட்டால் உன் பிள்ளைகள் தாக்கப்படுவார்கள் என இனவெறி ரீதியான மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து ஒரு குடும்பம் கனடாவின் ஆல்பர்ட்டாவை விட்டு பயந்து வெளியேறுகிறது.

St. Albert, ஆல்பர்ட்டாவில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர் Katrina Anderson என்னும் பெண்ணும் அவரது மூன்று பிள்ளைகளும்.

சில தினங்களுக்குமுன் அவர்களது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டியில் ஒரு கடிதம் இருப்பதைக் கண்டு அதை எடுத்து வந்து தனது தாயிடம் கொடுத்தார் Katrinaவின் 12 வயது மகள்.

மிகவும் விரும்பத்தகாத மற்றும் வெறுக்கத்தக்க அயலகத்தாருக்கு, என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த கடிதத்தைப் படித்த Katrinaவும் அவரது மகளும் நடுங்கிப் போனார்கள்.

இங்குள்ள அனைவராலும் நீங்கள் வெறுக்கப்படுகிறீர்கள், உங்கள் பிள்ளைகளால் எப்போது எங்களுக்கு தொந்தரவுதான், இப்போதெல்லாம் தேவையில்லாவிட்டால் கூட எங்கள் வீட்டுக் கதவுகளை இரவில் நாங்கள் பூட்டிக் கொள்கிறோம்.

உங்கள் வீட்டின் உரிமையாளருக்கு நாங்கள் தொடர்ந்து புகார் செய்து கொண்டே இருப்போம், நீங்கள் வீட்டை காலி செய்யும்வரை.

இவை எங்கள் சொந்த வீடுகள் , நாங்கள் இங்கு நீண்ட காலமாக வாழ்கிறோம், நீங்கள் வாடகைக்கு குடியிருக்க வந்திருக்கிறீர்கள், ஒழுங்காக வீட்டை காலி செய்து விட்டு ஓடாவிட்டால் பிரச்சினைகள் பெரிதாகும்.

உங்கள் பிள்ளைகள் தாக்கப்படுவதை பார்க்க விரும்ப மாட்டீர்கள் என்று நம்புகிறோம். இது ஒன்றும் குடியிருப்பு அல்ல, இந்தியர்களுக்கு சொந்தமான குடியிருப்புக்கு ஓடி விடுங்கள், என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

ஏற்கனவே ஒரு முறை கல் வீசி வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்ட நிலையில், இப்படி ஒரு கடிதமும் வர, பயந்து போன Katrinaவின் குடும்பம் வீட்டைக் காலி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இதற்கிடையில் St. Albert நகரின் மேயர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பொலிசாரும் அந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பிய நபரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் Katrinaவின் அயலகத்தார், அவர்களை விசாரித்தும், அவர்களுக்கு உணவளித்தும், பார்ட்டிகள் வைத்தும் அவரது குடும்பத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரியப்படுத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்