கனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதன் பின்னணியில் இருந்த பெண் இவர்தான்

Report Print Balamanuvelan in கனடா
438Shares

இன்று முதல் கனடாவில் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த முடிவை எடுப்பதற்கு காரணமாக இருந்த ஒரு பெண், பிரதமரோடு தாங்கள் நடத்திய பேச்சு வார்த்தைகளை நினைவு கூறுகிறார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஜஸ்டின் ட்ரூடோ கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதில் விருப்பம் உடையவராக இருக்கவில்லை.

பேட்டி ஒன்றில் அவர், கஞ்சா உங்களை நிஜ உலகிலிருந்து சற்று துண்டிக்கிறது என்றும், அது உடல் நலத்திற்கு நன்மை பயக்கக்கூடியதல்ல என்றும் கூட கூறியிருந்தார்.

2012 ஆம் ஆண்டில் இறுதியில் அவரது தோற்றம் உட்பட பல விடயங்கள் மாறியிருந்தன.

இன்று அந்த மாற்றத்திற்கு காரணம் அதே ஆண்டு நவம்பர் மாதம் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டு பெண்களுடனான சந்திப்பு என்கின்றனர் ட்ரூடோவும் அவரது ஆலோசகர்களும்.

அவர்கள் கஞ்சா தொடர்பான சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக முயற்சிகள் எடுத்த ஒரு அமைப்பின் உறுப்பினர்களான Kelly Coulter மற்றும் Andrea Matrosovs ஆகியோர்.

தற்போது விக்டோரியாவில் வாழும் Kelly Coulter அந்த சந்திப்பை நன்கு நினைவில் வைத்திருப்பதோடு, இந்த மாற்றத்துடன் தன்னை தொடர்புபடுத்தி பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்