இன்று முதல் கனடாவில் சட்டபூர்வமாகிறது கஞ்சா போதைப்பொருள்!

Report Print Kavitha in கனடா

கனடாவில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தடையை நீக்கி, இன்று முதல் கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக ஆக்கியுள்ளது

கடந்த சில மாதங்களாக மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா (cannabis) போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் கோரி கனடாவின் பல மாகாணங்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளன.

இதற்கமைய அண்மையில் கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க, இன்று முதல் நாடு முழுவதும் கஞ்சா போதைப் பொருளை அரசாங்கத்தின் அனுமதியுடன் கொள்வனவு மற்றும் விற்பனை செய்யக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா அரசாங்கமே நாடு முழுவதும் 109 அனுமதிக்கப்பட்ட கஞ்சா விற்பனை நிலையங்களை நிறுவ அனுமதி வழங்கியுள்ளது.

கறுப்புச் சந்தையில் இதுவரை சட்டவிரோதமாக விற்கப்பட்டுவந்த போதைப் பொருட்களை அரசாங்கத்தின் கண்காணிப்புக்குள் அதன் அனுமதியுடன் விற்பனை மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியதாக இருப்பதினால், இதன் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகயிருக்கும் என நிர்வாகப் பிரிவினர் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த ஆண்டு போதைப் பொருட்களை சட்டபூர்வமாக அனுமதித்த முதல் நாடு உருகுவே. தற்போது கனடா போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்