பள்ளிகளில் இளம் அகதிகள் மீது இனவெறித்தாக்குதல் நடத்தும் ஆசிரியர்கள்: அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in கனடா
187Shares

கனடாவில் இளம் அகதிகள் மீது சக மாணவர்களைவிட ஆசிரியர்கள் அதிக அளவில் இனவெறித் தாக்குதல் நடத்துவதாக தெரியவந்துள்ளது.

சமீபத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆதரவு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

New Brunswick மாகாணம் முழுவதிலுமிருந்து 12 முதல் 17 வயது வரையிலான 36 மாணவர்கள் பங்கு கொண்ட சந்திப்பு ஒன்றில் இளம் அகதிகள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டார்கள்.

17 வயது மாணவர் ஒருவர் கூறும்போது, பல சம்பவங்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம், மிகவும் கவலையாக இருந்தது, பள்ளிகளில் இவ்வளவு மோசமான விடயங்கள் நடைபெறும் என நான் நினைக்கவில்லை என்றார்.

மாணவர்களின் பிரச்சினைகள் அடங்கிய அந்த அறிக்கை அரசு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.புதிதாக பள்ளியில் சேரும் அகதிச் சிறுவர்களும் சிறுமிகளும் தினமும் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

மேலும் அவர்கள் தங்கள் சக மாணவர்களால் இன ரீதியாக தாக்கப்படுவதைக் காட்டிலும் அதிகமாக ஆசிரியர்கள் போன்ற பெரியவர்களால்தான் தாக்கப்படுகிறார்கள்.

விளையாட்டுத் திடலில் தன்னைக் குரங்கு என அழைத்ததாக ஒரு 17 வயது மாணவர் தெரிவிக்கிறார். சிரியா நாட்டைச் சேர்ந்த குடும்பம் ஒன்றோடு சாப்பிடச் சென்றால் ஆபத்துகளை சந்திக்க வேண்டி வரும் என தான் எச்சரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார் இன்னொரு மாணவர்.

இது போன்ற சந்திப்புகள் மாணவர்களுக்கிடையேயான பிரிவுகளை குறைக்கவும், அவர்களுக்கிடையே புரிதல்களை ஏற்படுத்தவும் உதவும் என கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.

பள்ளிகளுக்கு புதிதாக வரும் மாணவர்களை ஆதரிக்கும் குழுக்கள், அவர்களுக்கு உதவுவதோடு பள்ளியில் அவர்களை நடத்தும் விதத்தை கண்காணிக்கவும் வேண்டும் என்றும் பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்