16 வயது சிறுமியை கொலை செய்த 15 வயது சிறுவன்: அருகில் வசிப்பவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Raju Raju in கனடா
237Shares

கனடாவில் 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Regina நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த வீட்டில் 16 வயது சிறுமி உயிருக்கு போராடுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் மருத்துவர்களுடன் அங்கு வந்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த அனைவரையும் பொலிசார் விசாரித்தார்கள்.

பின்னர் கொலை தொடர்பாக 15 வயது சிறுவனை கைது செய்த பொலிசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், இது குறித்து தகவல் ஏதேனும் தெரிந்தால் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

சம்பவம் நடந்த வீட்டில் அருகில் வசிக்கும் டேவ் மெக்டொனால்டு என்பவர் கூறுகையில், தினமும் அந்த வீட்டிலிருந்து இரவு நேரத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் கத்தும் குரல் கேட்கும்.

அப்படி தான் கொலை நடந்த அன்றும் கேட்டது, பின்னர் நான் தூங்க சென்றுவிட்டேன்.

அங்கு வெளிச்சமாக இருப்பதை பார்த்து திடீரென எழுந்தபோது பொலிசார் அதிகளவு இருப்பதை பார்த்தேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்