விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த பர்தா அணிந்த நபர்: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in கனடா

வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் பர்தா அணிந்த ஒரு நபர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பிரபல கேங் மெம்பர் ஒருவரை சுட முயற்சித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Hells Angels என்னும் குழுவைச் சேர்ந்த Damion Ryan வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தின் உணவகம் ஒன்றில் அமர்ந்திருக்கும்போது, பர்தா அணிந்த ஒரு நபர் சாதரணமாக நடந்து சென்று, அவர் அருகே சென்றதும் தன் பர்தாவுக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட முயல்வதை அந்த வீடியோவில் காணலாம்.

ஆனால் அந்த நபர் சுடும்போது எதிர்பாரதவிதமாக துப்பாக்கி வெடிக்கவில்லை. இதனால் அலர்ட் ஆன Damion அங்கிருந்து தப்பி ஓடுகிறார்.

பர்தா அணிந்த அந்த நபரும் அங்கிருந்து தப்பி ஓடுகிறார். அங்கு என்ன நடந்தது என்பதை பெரும்பாலானோர் கவனிக்கவில்லை. பின்னர் பொலிசார் வாகன சோதனை நடத்தும்போது திருட்டு வாகனம் ஒன்றில் ஆயுதங்களுடன் வந்த இருவர் பிடிபட்டனர்.

விசாரணையில் அவர்கள் இருவருமே Damion Ryanஐ வான்கூவர் விமான நிலையத்தில் கொல்வதற்காக வந்தவர்கள் என்பது தெரியவந்தது. பர்தா அணிந்து வந்தது Knowah Ferguson (18) என்னும் நபர்.

அவனுடன் வந்த நபரின் பெயரை நீதிமன்றம் வெளிப்படுத்தவில்லை. Damion Ryanஐ கொன்றால் 200,000 டொலர்கள் கொடுப்பதாக ஒரு கும்பல் ஆசை காட்டியதின்பேரில் Ferguson இந்த முயற்சியில் ஈடுபட்டான்.

அன்று அந்த துப்பாக்கி வெடித்திருந்தால் அவனது திட்டம் நிறைவேறியிருக்கும். ஆனால் துப்பாக்கியின் விசை சிக்கிக் கொண்டதால் அவனது திட்டம் சொதப்பிவிட்டது.

இப்போது வீடியோ ஆதாரத்தின் பேரில் கொலை முயற்சிக் குற்றத்திற்காகவும் சதித்திட்டம் தீட்டியதற்காகவும் Fergusonக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers