கனடாவில் ஓடும் ரயிலின் கூரை மீது பயணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் தெற்கு ஒன்றாரியோ பகுதியில் ஓடும் ரயிலின் மீது பயணம் செய்த இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தெற்கு ஒன்றாரியோவின் Mississauga பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த மாத துவக்கத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலின் கூரை மீது அமர்ந்தபடி பயணம் மேற்கொள்ளும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் தீயாக பரவியது.

இதனையடுத்து ரயில் நிர்வாகம் குறித்த காணொளி தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அந்த காணொளியானது கடந்த 2017 ஆம் ஆண்டு யூன் மாதம் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.

இந்த நிலையில் குறித்த காணொளியில் காணப்படும் இளைஞரை பொலிசார் திங்களன்று கைது செய்துள்ளனர்.

இளைஞரின் வயதை கருத்தில்கொண்டு அவரது பெயர் உள்ளிட்ட எந்த தகவலையும் பொலிசார் வெளிவிட மறுத்துள்ளனர்.

மேலும் அடுத்த சில தினங்களில் குறித்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் எனவும், அப்போது விளக்கம் கேட்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கனடாவை பொறுத்தமட்டில் ரயிலின் கூரை மீது பயணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதற்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்