கனடாவில் லிப்ட் கேட்டு ஊர் சுற்றிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Report Print Balamanuvelan in கனடா

தெரியாதவர்களிடம் லிப்ட் கேட்டு கனடாவில் சுற்றுலா சென்ற பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

Amelie Sakkalis என்னும் அந்த சுற்றுலாப்பயணி லிப்ட் கேட்டு ஊர் சுற்றும் பழக்கம் உடையவர்.

இந்நிலையில் கனடாவில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட Amelie தனது பேஸ்புக் பக்கத்தில், Pentictonஇலிருந்து வான்கூவருக்கு செல்லும் யாராவது இருந்தால் தனக்கு லிப்ட் கொடுக்குமாறு கேட்டிருந்தார்.

அதேபோல் வான்கூவரிலுள்ள ஹோட்டல்கள் எல்லாம் நிரம்பி விட்டதால் தனக்கு யாராவது தங்க இடம் கொடுக்க முடியுமா என்றும் அவர் கேட்டிருந்தார்.

அன்றே அவர் வான்கூவருக்கு வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Boston Bar என்னும் நகரில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவ இடத்தில் இருந்த ஒரு மனிதன் கைது செய்யப்பட்டதோடு அங்கு நின்ற ஒரு வேனையும் பொலிசார் கைப்பற்றினர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த அந்த நபரை பொலிசார் விசாரித்து விட்டு பின்னர் விட்டு விட்டனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் Sean Ryan William McKenzie என்னும் அந்த மனிதன் மீது Amelieயைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers