கோடீஸ்வரரான அகதி: ஆனால் அவரது ஆசை என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் வசிக்கும் அகதி ஒருவருக்கு ஐந்து மாதங்களில் இரண்டு முறை லாட்டரியில் பரிசு விழுந்தது.

கிடைத்த தொகையில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது தான் கல்வி கற்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் வசிக்கும் ஆப்பிரிக்கரான Melhig Melhigக்கு (28) ஏப்ரல் மாதம் லாட்டரியில் 1.5 மில்லியன் கனடா டொலர்கள் பரிசு விழுந்தது.

அந்த பணத்தை பயன்படுத்தி குடியிருப்பு ஒன்றிலிருந்து புதிய வீடு ஒன்றிற்கு குடும்பத்துடன் குடி புகுந்தார் அவர்.

இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் அவருக்கு லாட்டரியில் மீண்டும் 2 மில்லியன் கனடா டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள பணத்தை என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அவர் ஒரு சொந்த தொழில் தொடங்க இருப்பதாகவும், பின்னர் பள்ளிக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனது முக்கிய நோக்கம் பள்ளிக்கு செல்வதுதான், எனது ஆங்கிலத்தை நான் மேம்படுத்த வேண்டும், அதற்கு பிறகு தச்சு வேலை போன்ற தொழிற்கல்வி எதையாவது கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்கிறார் அவர்.

இவ்வளவு வசதி வந்த பிறகும் கற்க வேண்டும் என அவர் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers