சூழ்ச்சிக்கு பலியான இரண்டு குழந்தைகளின் தாய்: பணத்துக்காக கணவனே ஏற்பாடு செய்தது அம்பலம்

Report Print Balamanuvelan in கனடா

இன்சூரன்ஸ் பணத்துக்காக ஒரு பெண்ணை திட்டமிட்டு கொலை செய்து அதை விபத்து போல் காட்டி ஏமாற்றிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதை செய்வதற்கு காரணமாக இருந்ததே அந்தப் பெண்ணின் கணவர்தான் என்னும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்ச்சியாக பல பிரச்சினைகளில் சிக்கி நஷ்டமடைந்த Iqbal என்னும் ஒருவர் பணப்பிரச்சினைகளிருந்து விடுபடுவதற்கு ஒரு குற்றச்செயலை செய்ய முடிவெடுத்தார்.

Iqbalம் அவரது மனைவியான Kulwinder Gillம் ஆளுக்கு 3 மில்லியன் டொலர்கள் இன்சூரன்ஸ் எடுத்திருந்தனர்.

Gurpreet Singh Atwal (32) என்பவர் Iqbalக்கு அறிமுகமானவர். தனது மனைவியை கொலை செய்தால், கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்தில் 50,000 டொலர்கள் Atwalக்கு தருவதாக ஆசை காட்டினார் Iqbal.

திட்டத்திற்கு சம்மதித்த Atwal, இரண்டு குழந்தைகளுக்கு தாயான Kulwinder Gillஐ ட்ரக் ஒன்றை வைத்து மோதினார்.

அவர் மோதிய வேகத்தில் 30 மீற்றர்கள் பறந்து சென்ற Kulwinder Gill பள்ளம் ஒன்றில் விழுந்தார்.

ஒன்றும் தெரியாதது போல ஆம்புலன்சுக்கு தகவலளித்தார் Iqbal. பொலிசார் வந்தபோது Kulwinder Gill உயிருடன் இல்லை.

Kulwinder Gillஇன் மரணத்தில் அவரது கணவர் மேல் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட அவர்கள் மாறு வேடத்தில் விசாரணையைத் தொடர்ந்தனர். பின்னர் உண்மை வெளிவர Iqbalக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவருக்கு உதவியாக கொலை சம்பவத்தை அரங்கேற்றிய Atwalக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்