ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த தாய்: அருகில் அழுது கொண்டிருந்த குழந்தை.. சோக சம்பவம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சாலை விபத்தில் தாய் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒன்றாறியோவின் ஒஷாவா நகரில் தான் இச்சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது.

43 வயதான பெண்ணொருவருவர் தனது 3 வயது பெண் குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த வாகனம் மீது கார் மோதியது.

இதில் படுகாயமடைந்த பெண்ணும் அவர் மகளும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயத்தின் வலியால் அழுது கொண்டிருந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில் உயிரிழந்த பெண்ணின் கார் மீது மோதிய வாகன ஓட்டுனரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அந்த வாகனத்தில் பயணித்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்