நான் இறக்கவில்லை, உயிரோடு தான் இருக்கிறேன் என புலம்பும் கனடியர்: காரணம் என்ன?

Report Print Raju Raju in கனடா

கனடாவின் சுங்க மற்றும் வருமான வரி துறை அலுவலகம் நபர் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ள விடயம் குறித்த நபரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Prince Edward Island மாகாணத்தை சேர்ந்தவர் ஜோசப் காலண்ட். இவர் பணி விடயமாக வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் அவருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

கனடாவின் சுங்க மற்றும் வருமான வரி துறை அலுவலகத்திலிருந்து வந்த அக்கடிதத்தில் ஜோசப் இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது யூன் மாதமே அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த கடிதத்தில், ஜிஎஸ்டி வரி மற்றும் குடும்ப கொடுப்பனவு பணத்தை வழங்கவும் கோரப்பட்டிருந்தது.

உயிரோடு இருக்கும் தாம் இறந்துவிட்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜோசப் எம்.பி அலுவலகத்துக்கு சென்று எல்லாவற்றையும் விளக்கினார்.

இதையடுத்தே தவறுதலாக ஜோசப் இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

விரைவில் இந்த பிரச்சனை சரியாகும் என உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க இன்னும் எத்தனை காலம் வேண்டும் என ஜோசப் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் காரணமாக கனடாவிலிருந்து வேறு இடத்துக்கு ஜோசப் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...