தவறான விமானத்தில் ஏறி 14 மணி நேரம் பயணித்த சினிமா இயக்குனர்: நடந்த சுவாரசியம்

Report Print Raju Raju in கனடா
317Shares
317Shares
lankasrimarket.com

கனடாவில் சினிமா இயக்குனர் ஒருவர் தவறான விமானத்தில் ஏறி 1500 மைல் தூரம் பயணம் செய்துள்ளார்.

வின்னிபெக்கை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் பயட்சாயோ. சினிமா இயக்குனரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை யெல்லோநைப் நகரிலிருந்து இனுவிக் என்ற இடத்துக்கு செல்ல விமானம் ஏறினார்.

ஆனால் அவர் ஏறியது நேர் எதிர் திசையில் அமைந்துள்ள இகாலுயிட் நகருக்கு செல்லும் விமானம் என்பது பின்னர் தெரியவந்தது.

அந்த விமானத்தில் 14 மணி நேரம் பயணம் மேற்கொண்ட பின்னரே விமான பணிப்பெண்ணிடம் பேசி அதை கிறிஸ்டோபர் புரிந்து கொண்டார்.

அதாவது, விமானம் புறப்படும் முன்பு 4-வது வாசலில் காத்திருந்தார். அப்போது அங்கு 3 விமானங்கள் நின்று கொண்டிருந்தன. 3-வது விமானத்திற்கான கடைசி அழைப்பும் வெளியானது.

அந்த பரபரப்பான நிலையில் தான் பயணம் செய்ய வேண்டிய விமானத்தை விட்டு தவறாக வேறு விமானத்தில் ஏறியது தெரியவந்தது. அதற்குள் அவர் 1,500 மைல் தூரம் வேறு திசையில் பயணித்தார்.

இது குறித்து கிறிஸ்டோபர் கூறுகையில், இந்த விவகாரத்தில் தனக்கு கோபம் இல்லை. இதற்கு முழுக்க முழுக்க தனது தவறே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்