நியூசிலாந்தை சேர்ந்த இளம் பெண் கனடாவில் உயிரிழந்த நிலையில் அவரின் காதலர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டானி ஹோகன் (23) என்ற பெண்ணும் லூயி எய்லியோ என்ற இளைஞரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் இருவரும் கனடாவுக்கு வந்தனர், ஒரு ஆண்டுக்கு அங்கு தங்க முடிவெடுத்தனர்.
கடந்த வாரம் டானி, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பாலத்திலிருந்து நான்கு பெண்களுடன் சேர்ந்து தண்ணீரில் குதித்துள்ளார்.
இதையடுத்து மீட்கப்பட்ட டானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்நிலையில் டானின் காதலர் லூயி உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், என் வாழ்க்கையின் நேசமாக டானி இருந்தார், இறுதி வரை அப்படி தான் இருப்பார்.
என் வாழ்க்கையிலும், இதயத்திலும் அவர் இருந்தார் என்பது நான் செய்த அதிர்ஷ்டம் தான்.
டானின் சடலத்தை நியூசிலாந்துக்கு கொண்டு செல்ல நிதியுதவி அளிக்க வேண்டும் என நிதிதிரட்டும் பக்கத்தில் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.