தத்தம் துணைவர்களைக் கொலை செய்ய முடிவு செய்த காதலர்கள்: வழக்கில் அதிரடி திருப்பம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவைச் சேர்ந்த காதலர்கள் தத்தம் துணைவர்களைக் கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Wakawவைச் சேர்ந்தவர் Curtis Vey, Melfortஐச் சேர்ந்தவர் Angela Nicholson, இருவரும் தத்தம் துணைவர்களைக் கொலை செய்ய திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர், நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதாவது, Curtis Veyஇன் மனைவி தனது ஐபோடில் அவரது கணவருக்கும் Angelaவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை இரகசியமாக பதிவு செய்தார்.

அதில் Curtis Veyஇன் மனைவியை தீவைத்து கொளுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவிக்க, சாலையில் செல்பவர்களுக்கு தீ எரிவது தெரியுமே என Angela கவலை தெரிவிக்கிறார்.

அதேபோல் Angelaவின் கணவருக்கும் போதை மருந்துகளைக் கொடுத்து அவரையும் ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என பேசுவது போன்று இருந்தது.

இதனை ஆதாரமாக கொண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இருவரும் மேல் முறையீடு செய்தனர்.

மாறு வேடத்தில் Curtis Veyயை கண்காணிக்க அனுப்பப்பட்ட பொலிசாரிடம், அவர்கள் பொலிசார் என்று தெரியாத நிலையில் பேசிக்கொண்டிருந்தவர், தனக்கு தன் மனைவியை கொலை செய்யும் எண்ணம் எல்லாம் கிடையாது என்றும் எப்போதும் அவள் தன்னை வேவு பார்ப்பதாகவும், தன் பிள்ளைகளும் அவளுக்கே ஆதரவாகவும் இருப்பதால் அவளை எரிச்சலூட்டுவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.

அதேபோல் Angela Nicholsonஇன் வழக்கறிஞரும் அவரும் Curtis Veyயும் தற்போது காதலர்களாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த முந்தைய நீதிபதி தவறிழைத்து விட்டதாகக் கூறி, இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று புதிய வழக்காக தொடங்கலாம் அல்லது வழக்கை தள்ளுபடி செய்யலாம் என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers