லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்த நபர்: விழுந்த $1 மில்லியன் பரிசு என்ன ஆனது தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் லாட்டரி சீட்டு வாங்கியதை நபர் மறந்து போன நிலையில் சில வாரங்கள் கழித்து தனக்கு விழுந்த $1 மில்லியன் பரிசு தொகையை பெற்று கொண்டுள்ளார்.

வின்னிபெக் நகரை சேர்ந்தவர் லேரி லீட்பீட்டர். இவர் கடந்த மாதம் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் லாட்டரி குலுக்கலில் லேரி வாங்கிய சீட்டுக்கு $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

ஆனால் லாட்டரி சீட்டு வாங்கியதையே அவர் மறந்துவிட்ட நிலையில், குலுக்கல் நடந்து சில வாரங்கள் கழித்தே அது குறித்து லேரிக்கு ஞாபகம் வந்துள்ளது.

இதையடுத்து தனக்கு பரிசு விழுந்துள்ளது என்பதை உறுதி செய்து கொண்ட லேரி பாதுகாப்பு வைப்புப்பெட்டியில் வைத்திருந்த சீட்டை எடுத்து கொண்டு சமீபத்தில் லாட்டரி நிறுவனத்திடம் சென்று பரிசை பெற்று கொண்டுள்ளார்.

லேரி கூறுகையில், என்றாவது ஒருநாள் பரிசு விழும் என நினைத்தேன், ஆனால் நிச்சயமாக இதை நான் எதிர்பார்க்கவில்லை.

பரிசு பணத்தை வைத்து முதலில் ஒரு கார் வாங்கலாமா என யோசித்து கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers