கணவர் எதனால் கொல்லப்பட்டார் என்று தெரியாமல் தவிக்கும் மனைவி: பொலிஸ் விளக்கம்

Report Print Balamanuvelan in கனடா
89Shares
89Shares
ibctamil.com

கனடாவின் Surreyபகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தனது கணவர் எதனால் கொல்லப்பட்டார் என்றே தெரியாமல் மனைவி தவிக்கும் நிலையில் அவர் தவறுதலாக சுடப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Paul Bennett (47) தனது வீட்டின் முன்பு வைத்தே அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.

தனது கணவர் மிகவும் இரக்கமுள்ளவர் என்றும் ஒரு ஹாக்கி கோச்சாக தன்னார்வலராக செயல்பட்டதோடு ஒரு நல்ல நர்ஸாக செயல்பட்டதாகவும் தெரிவிக்கிறார் Darlene Bennett.

அவர் மீது கிரிமினல் ரிக்கார்டு எதுவும் கிடையாது என்றும் அவர் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலேயே இப்படிப்பட்ட சம்பவம் நடை பெற்றதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் அவர்.

அவருக்கு பதிலளிக்கும் வகையில் விசாரணை அதிகாரி ஒருவர், இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பொது மக்களின் பாதுகாப்பு குறித்தெல்லாம் யோசிப்பவர்கள் இல்லை என்று தெரிவித்தார்.

Paul Bennett தவறுதலாக சுடப்பட்டார் என்றால், சுட்டவர்கள் யாரைக் குறி வைத்தார்கள் என்பதைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்