லாட்டரியில் $60 மில்லியன் வென்ற நபர்: பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

கனடாவில் லாட்டரியில் நபருக்கு $60 மில்லியன் பரிசு விழுந்த நிலையில் தனது நான்கு நண்பர்களுடன் பரிசு தொகையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒட்டாவாவை சேர்ந்த பிரயென் ரெட்மேன், ஸ்டீபன், டியோன், கிறிஸ்டோபர், நார்மன் ஆகிய ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.

ஐவருக்குமே லாட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஐவரும் சேர்ந்து ஆளுக்கொரு லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளனர்.

இதில் ரெட்மேன் வாங்கிய சீட்டுக்கு முதல் பரிசாக $60 மில்லியன் விழுந்துள்ளது.

இந்த பரிசு தொகையை ரெட்மேன் தனியாக எடுத்து கொள்ளாமல் தனது நான்கு நண்பர்களுடன் பரிசு தொகையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், பரிசு விழுந்தது மகிழ்ச்சியளிப்பதோடு, என் நண்பர்களுடன் அதை பகிர்ந்தது மேலும் உற்சாகத்தை கொடுப்பதாக கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்