கனடாவில் வீட்டு வாசல் முன்பு வைத்து இந்திய இளைஞர் சுட்டுக்கொலை!

Report Print Vijay Amburore in கனடா

கனடாவில் இந்திய இளைஞர் ஒருவர் வீட்டு வாசல் முன் வைத்து 4 மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் Brampton டான்வுட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் 27 வயதாகும் பல்விந்தர் சிங். கடந்த 2009-ல் இந்தியாவில் இருந்து கனடாவில் குடியேறிய பல்விந்தர், டிரக் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த செவ்வாய்கிழமையன்று மர்ம நபர்கள் 4 பேரால் வீட்டின் வாசல் முன் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட்டார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், Mississauga பகுதியை சேர்ந்த 18 மற்றும் 19 வயதுள்ள இரு இளைஞர்கள் காவல்நிலையத்த்ல சரணடைந்துள்ளார். மற்றவர்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பல்விந்தரின் நண்பர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் உன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினோம். ஆனால் தற்போது நீ இல்லை. நீ இறப்பதற்கான தருணமும் இது இல்லை என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக Brampton பகுதியில் நடைபெற்றுள்ள 11-வது கொலை சம்பவம் இது எனவும், இதுகுறித்து தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேயர் லிண்டா ஜெஃப்ரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்