கோலாகலமாக நடைபெற்ற கியூ பெக் கோடை திருவிழா! இசை மழையில் நனைந்த ரசிகர்கள்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் நடைபெற்ற கியூ பெக் கோடை திருவிழா டேவ் மத்தீவ்ஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு நிறைவடைந்தது.

ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த இசை திருவிழா, கடந்த 5 ஆம் திகதி தொடங்கி தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற்றது.

இதில் இடம் பெற்ற றொக் அண்ட் ரோல் பாடல்கள் ஆயிரக்கணக்கான ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கடந்த 11 நாட்களாக 250 ற்கும் மேற்பட்ட நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்