கனடாவின் முதல் தமிழ் எம்.பி-யிடமிருந்து தமிழச்சிக்கு கிடைத்த உயரிய கெளரவம்

Report Print Raju Raju in கனடா

சென்னையை பூர்வீகமாக கொண்ட பெண் வழக்கறிஞருக்கு கனடாவின் முதல் தமிழ் எம்.பி ராதிகா, சிறந்த தொழில் புரிவோருக்கான விருதை வழங்கி கெளரவித்துள்ளார்.

கிளாடீஸ் டேனியல் என்ற பெண் வழக்கறிஞர் சென்னையில் உள்ள Daniel & Gladys சட்ட நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

இவருக்கு உலக தமிழ் அமைப்பு சார்பாக சட்ட பிரிவில் சிறந்த தொழில் புரிவோருக்கான விருது லண்டனில் உள்ள House of Commons-ல் வழங்கப்பட்டது.

கிளாடீஸுக்கு அவ்விருதினை கனடாவின் முதல் தமிழ் எம்.பி-யான ராதிகா சிட்சபீசன் வழங்கினார்.

உலக தமிழர் அமைப்பு பிரித்தானியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தொண்டு நிறுவனமாகும்.

இந்நிறுவனம் உலகெங்கிலும் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் தமிழர்களை தேர்ந்தெடுத்து கெளரவம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers