கருச்சிதைவான மகள் ஆவியாக வந்து தங்கையை முத்தமிட்ட நெகிழ்ச்சி வீடியோ

Report Print Trinity in கனடா

கனடா டொரோண்டோ பகுதியை சேர்ந்த மெலிசா ஸ்மித் என்பவர் இரு குழந்தைகளுக்கு தாய். இவரது முதல் பெண் குழந்தை கருச்சிதைவில் இறந்து விட இரண்டாவதாக லீயாவை பெற்றெடுத்திருக்கிறார்.

தனது எட்டு மாத குழந்தை லீயாவின் அறையில் ஒரு சிறிய கமெராவை பொருத்தியிருக்கும் மெலிசா அதன் மூலம் குழந்தை உறங்கும் சமயங்களில் அதனை கவனித்து கொண்டிருப்பார்.

தனது முதல் குழந்தையை செப்டம்பர் மாதம் 2016ல் கருவிலேயே இழந்திருக்கிறார் மெலிசா. அதே நாளில் தனது வீட்டில் இருந்த ஒரு பொம்மை தானாக சப்தம் எழுப்பியபடி இருந்த ஒரு வினோத நிகழ்வும் நடந்தது என்கிறார்.

அதன்பின் இது போன்ற பல அமானுஷ்யங்கள் அந்த வீட்டில் நடந்துள்ளன என்று கூறும் மெலிசா லீயா பிறந்த பின் கடந்த மே மாதம் 31ஆம் தேதிதான் இதற்கான முதல் நிரூபணத்தை தனது குழந்தையின் கமெரா மூலம் கண்டிருக்கிறார்,

சம்பவம் நடந்த அன்று தனது நண்பர்களுடன் மொபைலில் சாட் செய்து கொண்டிருந்திருக்கிறார் மெலிசா. அப்போது தனது குழந்தை லீயா இருந்த கமெராவில் இருந்து வினோதமான சப்தங்கள் கேட்டிருக்கிறது.

உடனடியாக லீயா இருந்த கமெரா காட்சிகளை முழுமையாக பார்த்த போது தொட்டிலின் ஒரு மூலையில் குழந்தை லீயா உடல் முழுதும் போர்வையால் மூடியபடி மூச்சு திணறியபடி இருந்திருக்கிறாள். பார்ப்பதற்கு அங்கு ஒரு பொம்மை முகத்தின் மீது லீயா முகம் வைத்தபடி இருந்தது போல தெரிந்திருக்கிறது.

உடனடியாக குழந்தையை தூக்கி கொண்ட மெலிசா குழந்தையை ஆசுவாசப்படுத்தியபின் கமெராவை மீண்டும் பார்த்திருக்கிறார்.

அப்போதுதான் அந்த தொட்டிலில் மூலையில் பொம்மை போன்ற ஒரு முகம் தென்பட்டுள்ளது. மெலிசாவிடம் விலங்குகள் போன்ற பொம்மைகள் உள்ளதே தவிர இப்படி ஒரு பொம்மை இல்லை என்கிறார்.

தனது முதல் குழந்தை இறந்ததில் இருந்து அந்த வீட்டில் பல்வேறு வித அமானுஷ்யங்களை அந்த குடும்பத்தினர் சந்தித்துள்ளனர். அலமாரி கதவுகள் படபடவென அடிப்பது, மேசை விளக்கு நகர்வது போன்ற விடயங்கள் நடந்திருக்கிறது.

இந்த நிகழ்வை குறிப்பிடுகையில் தனது இரண்டாவது மகள் லீயாவை முதல் மகளின் ஆவி முத்தமிட்டது போல இருந்ததாக மெலிசா கூறுகிறார்.

முதலில் நம்பாத நண்பர்கள் இந்த வீடியோவை பார்த்த பிறகு உடனடியாக மெலிசா குடும்பத்தினரை வீடு மாற்ற சொல்லி கட்டாயப்படுத்தி வருகின்றனர். மெலிசாவும் அதுபற்றிய யோசனையில்தான் இருக்கிறாராம்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers