கனடாவில் வாள்வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரால் பரபரப்பு

Report Print Arbin Arbin in கனடா

டொராண்டோ நகரின் Rexdale பகுதியில் வாள்வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்திருந்த நபரை பொலிசார் மீட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பொலிசார், சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் Rexdale பகுதியில் இரண்டு கும்பலுக்கு இடையே சண்டை நடப்பதாக தகவல் வந்தது.

இதேபோன்று பிற்பகல் ஒரு மணியளவில் ரத்த வெள்ளத்தில் சுயநினைவை இழந்த நிலையில் நபர் ஒருவர் Martin Grove சாலையில் கிடப்பதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து இரண்டு சம்பவப்பகுதிக்கும் விரைந்த பொலிசார், இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

வாள்வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்ப்பித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டு விவகாரம் தொடர்பிலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...