நாங்கள் குழந்தைகளைப் பிரிக்கும் இரக்கமற்றவர்கள் இல்லை: அமெரிக்காவுக்கு கனடா பதிலடி

Report Print Balamanuvelan in கனடா

சில நாட்களுக்குமுன் வெளியான பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழையும் குடும்பங்களிலிருந்து குழந்தைகளைப் பிரித்து பெரிய இரும்புக் கூடுகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதையும், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் குழந்தைகள் கதறியழுவதையும் காட்டின.

இச்சம்பவம் உலகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சில அமெரிக்க முக்கியப் புள்ளிகள் அவர்கள் குழந்தைகள் அல்ல நடிகர்கள் என்று கூறி எரியும் தீயில் எண்ணெயை ஊற்றினார்கள்.

இந்நிலையில் கனடாவை வம்புக்கிழுக்கும் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வண்ணமாக நாங்கள் எங்கள் நாட்டில் குழந்தைகளை இப்படி நடத்துவது இல்லை என கனடா பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவில் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி பெற்றோரிடம் இருந்து குழந்தைகளைப் பிரித்தல் கடைசி கட்ட நடவடிக்கையாகத்தான் கருதப்படுகிறது.

குழந்தைகளின் நலன் உட்பட பல விடயங்களைக் கருத்தில் கொண்டு வேறு வழியே இன்றி கடைசி கட்ட நடவடிக்கையாகத்தான் ஒரு சிறுவன் அல்லது சிறுமியை காவலில் வைக்கும் முடிவை எடுக்கும் கனடா.

அதாவது பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் காரணங்கள் இருந்தாலொழிய சிறுவர்களை காவலில் வைப்பது தவிர்க்கப்படும்.

கனடாவைப் பொருத்தவரை காவலில் இருக்கும் சிறுவர்கள் குற்றமிழைத்த தங்கள் பெற்றோரைப் பிரியக்கூடாது என்பதற்காக அவர்களுடன் இருப்பவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...