கனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சாவின் பயன்பாடு

Report Print Fathima Fathima in கனடா

கனடாவில் உற்சாகத்திற்காக கஞ்சா பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு முதல் கஞ்சாவை மருத்துவத்திற்காக பயன்படுத்துவது கனடாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

2015ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் தற்போதைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, உற்சாகத்திற்காகவும் கஞ்சா அனுமதிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதன்படி 18 வயதுக்கு கீழ்உள்ளவர்கள் 30 கிராம் வரை கஞ்சா வைத்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்காக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இது கடந்தாண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மேலவையில் சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று செனட் சபையில் 52- 29 என்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

கஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற வரையிலான அம்சங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் இதில் உள்ளன.

ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில், பிள்ளைகளுக்கு கஞ்சா எளிதில் கிடைப்பதாகவும், சமூக குற்றவாளிகள் லாபம் சம்பாதிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இச்சட்டத்தின் மூலம் இதற்கு முடிவு கட்டியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்துக்கு அரசியலமைப்பு ஒப்புதல் இந்த வாரத்தில் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...