ஆவியாக வந்த வளர்ப்பு நாய்: பெண்மணியின் சிலிர்ப்பான அனுபவம்

Report Print Trinity in கனடா
360Shares

வளர்ப்பு நாய் ஒன்று ஆவியாக வந்து அதனை வளர்த்த பெண்மணிக்கு ஆறுதல் சொன்ன அனுபவம் நடந்திருக்கிறது.

கனடாவின் மனிடோபா பகுதியை சேர்ந்தவர் Michelle Creighton (44), இவரது வளர்ப்பு நாய் Oakley கிரேட் டென் வகையை சேர்ந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் எட்டு வயதான Oakley இறந்துவிட்டது, அதனை தொடர்ந்து அந்த துக்கம் தாளாமல் மிச்செல் அழுதபடியே பல வாரங்களாக Oakleyயை நினைத்து ஏங்கியிருக்கிறார்.

எங்கு திரும்பினாலும் வளர்ப்பு நாய் Oakleyயின் ஞாபகங்கள் அவரது மனதை உடைய செய்திருக்கின்றன.

இந்நிலையில் திடீரென ஒருநாள் இரவு அவர் படுத்திருக்கும் லிவிங் அறையின் திரைசீலையில் Oakley போன்ற ஒரு உருவம் தென்பட்டிருக்கிறது.

தனது கண்களை நம்ப முடியாத மிச்செல் சிறிது நேரம் அந்த நிழலையே உற்று பார்த்திருக்கிறார். அது அப்படியே Oakleyயின் உருவத்தின் பிரதிபலிப்பாக இருந்திருக்கிறது. அதனால் மிகவும் சந்தோஷமடைந்த மிச்செல் இந்த விடயத்தை உடனடியாக புகைப்படம் எடுத்திருக்கிறார். காரணம் தான் சொல்வதை மற்றவர்கள் நம்ப மாட்டார்கள் என்பதால்தான்.

அதன் பின் அந்த திரைசீலையை விலக்கி Oakleyயை தேடி இருக்கிறார். ஆனால் அதன்பின் அது கண்களுக்கு தட்டுப்படவில்லை.

இருப்பினும் இப்போது தான் மிகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பதாக மிச்செல் கூறினார். எனது நாய் எங்கிருக்க வேண்டுமோ அங்குதான் இருக்கிறது. என் வீட்டில். என்னோடு, என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.

Oakley இறந்தபின் அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில்தான் புதைக்கப்பட்டது. இப்போது நிம்மதியாக இருக்கிறது இறந்தாலும் எங்கள் Oakley எங்களை விட்டு பிரியவில்லை. எங்களோடுதான் இருக்கிறது.

அதுவே எங்களுக்கு போதும் என்று சந்தோஷிக்கிறார் மிச்செல்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்