டிரம்புக்கு எதிராக கனடா மக்கள் எடுத்த அதிரடி முடிவு

Report Print Balamanuvelan in கனடா
293Shares

அமெரிக்கா, மரப்பலகைகள், துருப்பிடிக்காத எஃகு ஆகியவற்றின்மீது புதிய வரிகளை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனடா மக்கள் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர்.

G7 மாநாட்டிலிருந்து புறப்பட்டதுமே அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவை நேர்மையற்றவர் மற்றும் வலிமையற்றவர் என்று விமர்சித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.

G7 மாநாட்டில் கையெழுத்திடுவதாக சம்மதம் தெரிவித்த கூட்டு ஒப்பந்தம் ஒன்றிலிருந்து அமெரிக்க அதிபர் வெளியேறினார்.

அமெரிக்க அதிபரின் தான்தோன்றித்தனமான முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனடியர்கள் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

அது, இனி அமெரிக்க பொருட்கள் எதையும் வாங்குவதில்லை, கனடா தயாரிப்புகளை மட்டுமே வாங்குவது என்னும் முடிவாகும்.

தற்போது #BoycottUSA, #BuyCanadian மற்றும் #VacationCanada என்னும் ஹேஷ் டேக்குகள் மற்றும் அவற்றிற்கிணையான பிரெஞ்சு ஹேஷ் டேக்குகள் கனடா தேசபக்தர்களுக்கிடையே பிரபலமாகி வருகின்றன.

கனடாவை நேசிக்கும் சிலர், அமெரிக்கப் பொருட்கள் எதுவானாலும் அது பிரெஷ்ஷான உணவோ, டின்களில் அடைக்கப்பட்ட உணவோ, அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகள், அமெரிக்க உணவகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் உட்பட அனைத்தையுமே தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

சீனாவுக்கு அடுத்தபடியாக கனடா அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும்.

2017ஆம் ஆண்டில் மட்டும் கனடாவுடன் அமெரிக்கா 673.9 பில்லியன் டொலர்களுக்கு வர்த்தகம் செய்துள்ள நிலையில் கனடா மக்கள் தற்போது எடுத்துள்ள முடிவு எந்த அளவில் அமெரிக்க வர்த்தகத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்