சட்ட விரோதமாக நுழையும் ரோஹிங்ய அகதிகளை ஆதரிக்கும் கனடா மக்கள்

Report Print Kabilan in கனடா

கனடாவில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருந்து நுழையும், ரோஹிங்ய அகதிகளை அந்நாட்டு மக்கள் ஆதரிக்கும் நிலையில், அவர்கள் எப்படி கையாள்வது என்பது குறித்து கனடா அரசு ஆலோசித்து வருகிறது.

மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வன்முறை, துன்புறுத்தலால் பாதிக்கப்படும் ரோஹிங்ய இன மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் சட்ட விரோதமாகவே நுழைகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்தும் ரோஹிங்யர்கள் கனடா நாட்டிற்கு சட்ட விரோதமாக நுழைகிறார்கள்.

இவர்களை அந்நாட்டு மக்களும் ஆதரிக்கின்றனர். ஆனால், கனடா அரசு இவ்வாறு சட்டவிரோதமாக நுழைபவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், Nanos Research எனும் பெயரில் இதற்காக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் அமெரிக்காவில் இருந்து கனடாவில் சட்டவிரோதமாக நுழையும் இந்த அகதிகளை எப்படி வரவேற்பது என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு 50 சதவிதத்திற்கு அதிகமானோர் அவர்களை தாராளமாக வரவேற்கலாம் எனவும், 43 சதவித பேர் குறைந்த வரவேற்பே அளிக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே போல் கனடா நாட்டு சட்ட அமலாக்கத்தின் முன்னிலையில் இதுதொடர்பாக கேட்கப்பட்டபோது, 57 சதவிதம் என்ற அளவில் ஆதரவு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பின் முடிவில் கனேடியர்களில் 10-யில் 6 பேர், ரோஹிங்யர்கள் கனடாவில் நுழைவதற்கு ஆதரவு தருவதாக தெரிய வந்துள்ளது.

ரோஹிங்யர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நன்மை செய்யும் வகையில், கனடா அரசு 150 மில்லியன் டொலர்களை ஒதுக்கியிருப்பதாக முன்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது கனடா மக்கள் அளிக்கும் ஆதரவின் காரணமாக 300 மில்லியன் டொலர்களாக அந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers